உலகம்
Typography

ஏப்பிரல் 16 - 20 இடைப்பட்ட காலப் பகுதியில் பாகிஸ்தான் மண்ணின் மீது இந்திய இன்னொரு இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கான ஆதாரம் தமக்குக் கிடைத்ததா அல்லது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடிய திருத்தமான நேரம் பற்றி எப்படித் தெரியும் என்பது குறித்து குரேஷி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் தகவல் பரிமாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகவும் குரேஷி குறிப்பிட்டுள்ளார். புல்வாமாவில் இந்திய துணை இராணுவமான சி பி ஆர் எஃப் இனைச் சேர்ந்த 40 வீரர்களைப் பலி வாங்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பெப்ரவரி இறுதியில் பாகிஸ்தான் மண்ணில் விமானத் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இவ்விரு அணுவாயுத தேசங்களுக்கு இடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் பெப்ரவரி 26 ஆம் திகதி இந்தியா பதிற் தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் மூடப்பட்ட வான் வழித்தடத்தை பாகிஸ்தான் அண்மையில் மீளவும் திறந்துள்ளது. முன்னதாக இந்த வான் வழித் தடம் சர்வதேச விமானங்களுக்காக மூடப் பட்ட போது டெல்லியில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் சுற்றிக் கொண்டு சென்றதால் விமானப் பயணத்துக்கான நேரமும், செலவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்