உலகம்
Typography

பிரேசிலில் உள்ள ரால் பிரேசில் என்ற ஆரம்பப் பள்ளியில் புதன்கிழமை காலை முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியுடன் நுழைந்த இரு மர்ம நபர்கள் பள்ளிக் குழந்தைகள் மீது கண் மூடித் தனமாக சுட்டுத் தள்ளியதில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதுடன் 17 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் பிறகு தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இன்றைய தினத்தில் சுமார் 1000 மாணவர்கள் வகுப்புக்கு வந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான உரிய காரணம் என்னவென்பது இன்னமும் கண்டறியப் படவில்லை. 2011 இல் இதே போன்ற பாணியில் பிரேசிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 குழந்தைகள் பலியாகி இருந்தனர்.

இதனால் பிரேசிலில் உள்ள பெற்றோர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதிலும், அவர்கள் பாதுகாப்புக் குறித்தும் கடும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். உலகில் வன்முறை அதிகம் நிகழும் நாடான பிரேசிலில் துப்பாக்கிச் சட்டங்கள் மிக இறுக்கம் என்றாலும் சட்ட விரோதத் துப்பாக்கி விற்பனை அங்கு சர்வ சாதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்