உலகம்
Typography

புல்வாமா உட்பட இந்தியா மீது தொடுக்கப் பட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த ஜெய்ஸ் இ முகமது என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாகா அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொண்ட 4 ஆவது முயற்சி இதுவாகும். அனைத்து முயற்சிகளிலும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை செய்த சீனா மசூத் அசாருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பல நாடுகள் மசூத் அசாரைத் தீவிரவாதியாக அறிவிக்கத் தயாராக இருந்த போதும் சீனாவின் வீட்டோ அதிகாரத்தால் அனைத்தும் தவிடு பொடியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்