உலகம்
Typography

பிரேசிலின் தென்கிழக்கே உள்ள புருமாடின்கோ நகரத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான இரும்புத்தாது சுரங்கத்துக்கு அருகே உள்ள அணை பெப்ரவரி 25 ஆம் திகதி உடைந்து பெரும்பாலான தண்ணீரும் சேரும் நகரைச் சூழ்ந்தது.

இதில் சிக்கிக் கொண்ட ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் ஒன்றும் சகதியில் மூழ்கியது.

பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களது வீடுகளுக்குள் சகதி நிரம்பியது. இதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி பல நாட்களாக நடைபெற்று வருகின்றது. தற்போது இந்த விபத்தில் பலியானவர்கள் தொகை 200 ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர 108 இற்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணியும் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்