உலகம்
Typography

சமீபத்தில் உலகை அதிர வைத்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒன்றின் 2 ஆவது தொடர் விபத்தாகக் கருதப் படும் எத்தியோப்பிய பயணிகள் விமானத்தின் விபத்தை அடுத்து சீனாவும் அதைத் தொடர்ந்து 8 சர்வதேச நாடுகளும் இந்த ரக விமானத்துக்குத் தடை விதித்துள்ளன.

இதில் இந்தியர்கள் 8 பேர் பலியானது உறுதியாகியதை அடுத்து இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதியாக இணைந்து கொண்டுள்ளன.

முதலாவதாக உடனடியாக எத்தியோப்பியாவும் அதைத் தொடர்ந்து சீனாவும் தடை விதித்தன. மேலும் இன்றைய திகதியில் இந்தோனேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளும் இந்த விமான சேவைக்குத் தடை விதித்துள்ளன. இந்த அதிரடி தடை உத்தரவினால் சர்வதேச பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை 5% வீதம் சரிவடைந்துள்ளது.

இதேவேளை இந்த விமான விபத்தில் பலியான 6 பேரின் குடும்பங்கள் குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை எனவும் தெரிய வந்துள்ளது. இதேவேளை இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கு 2 நிமிடம் தாமதமாக வந்து பயணத்தைத் தவற விட்ட காரணத்தால் ஏதன்ஸைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவரான அண்டோனீஸ் மாவ்ரோபொலோஸ் என்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS