உலகம்
Typography

சிரியாவின் கிழக்கே ஈராக் எல்லையருகில் பாகூஸ் என்ற ஊரில் ISIS தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க ஆதரவுடன் சிரிய ஜனநாயகப் படைக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்று வருகின்றது.

இந்த கிராமம் தான் ISIS தீவிரவாதிகள் வசமிருக்கும் கடைசி கிராமம் என்றும் இக்கிராமம் அமெரிக்க ஆதரவு சிரிய படைகள் வசமானால் 2014 இல் அத்தீவிரவாதிகள் தாம் அமைத்ததாகக் கூறும் கலிபேட் என்ற இராசசியம் முடிவுக்கு வந்து விடும் என அமெரிக்காவும் கூட்டணிப் படைகளும் முறைப்படி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஆனாலும் ஒரு தரப்பினர் ISIS இப்பகுதியை இழந்தாலும் உலகின் பிற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் சக்தியுள்ள அமைப்பாகவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அவர்கள் தொடர்ந்து நீடிப்பர் என்றும் கருதுகின்றனர். எனினும் பாகூஸில் மார்ச் முதலாம் திகதி முதல் தாக்குதல் முற்றி வந்துள்ளது. நடுவே பொது மக்களை ISIS தீவிரவாதிகள் கேடயங்களாகப் பயன்படுத்தியமையால் அவர்களைப் படிப்படியாக விடுவிக்க வேண்டிய தேவையும் சிரிய படையினருக்கு இருந்துள்ளது. எனினும் பல ஆயிரக் கணக்கான பொது மக்கள் வெளியேற்றப் பட்டதுடன் நூற்றுக் கணக்கான ISIS போராளிகள் சரணடைந்தும் உள்ளனர்.

இதேவேளை ISIS இன் தோல்வி குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வருமா என இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்