உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கிப் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 149 பயணிகளும் 8 பணியாளர்களுமென அனைத்து 157 பயணிகளும் பலியாகி உள்ளதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை சரியாகத் தெரியவில்லை. விமானம் விபத்தில் சிக்கி விழுந்த இடத்தில் இருந்து சடலங்களை அப்புறப் படுத்தும் பணியும், கருப்புப் பெட்டியைத் தேடும் பணியும் இடம்பெற்று வருகின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 4 இந்தியர்களும், 8 அமெரிக்கர்களும், 18 கனேடியர்களும், சீனா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தலா 8 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 7 பேரும், எகிப்தைச் சேர்ந்த 6 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பேரும், ஸ்லோவோக்கியாவைச் சேர்ந்த 4 பேரும் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைத்து இந்தியர்களது குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் குறித்த விமான நிறுவனத்துடன் மேலதிக விபரங்களைப் பெறத் தொடர்ந்து இணைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்