உலகம்
Typography

ஆப்கானைச் சேர்ந்த போராளி அமைப்பான தலிபான்கள் எதிர்வரும் வாரம் பாகிஸ்தானில் வைத்து மூத்த அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தலிபான்களின் இந்த அறிவிப்பை வாஷிங்டனோ அல்லது இஸ்லாமாபாத்தோ இதுவரை உறுதி செய்யவில்லை. இது குறித்து தலிபான்களின் பேச்சாளர் ஷபியுல்லாஹ் முஜாஹிட் ஊடகங்களுக்கு அளித்த தகவலில்,

'பெப்ரவரி 18 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு முறையான அழைப்பு விடுத்திருந்ததாகத்' தெரிவித்துள்ளார். நடப்பில் இருந்து வரும் தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் பெப்ரவரி 25 ஆம் திகதி கட்டாரில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்