உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் தாய்வானில் 3 ஆவது நாளாக நீடிக்கும் சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பைலட்டுக்களது வேலை நிறுத்தப் போராட்டம் அங்கு மேலும் பல விமான சேவைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளன.

இந்த பைலட்டுக்களின் யூனியனின் முக்கிய கோரிக்கைகளாக 8 மணித்தியாலத்துக்கும் அதிகமான விமானப் பயணத்துக்கு மேலதிக பைலட்டுக்கள் நியமிக்கப் பட வேண்டும் என்பதும் மிகவும் எளிமையாக்கப் பட்ட ஒரு பொறிமுறை மூலம் வருடக் கடைசியில் வழங்கப் படும் போனஸ் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக 47 விமானப் பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதில் ஈடுபட்ட பைலட்டுக்களின் யூனியனில் மொத்த பைலட்டுக்களான 1300 இல் 70% வீதம் அடங்குகின்றனர். ஏற்கனவே CAL பணியாளர் குழு 2016 இல் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.

தாய்வானின் முக்கிய இரு ஏர்லைன்ஸ்களில் ஒன்றான சீனா ஏர்லைன்ஸின் இந்த வேலை நிறுத்தத்தால் ஹாங்கொங், பாங்கொக், லாஸ் ஏஞ்சல்ஸ், மனிலா மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களுக்குச் செல்லும் முக்கிய சர்வதேச விமானப் பயணங்கள் தடைப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS