உலகம்
Typography

தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபவடுதை அந்நாட்டு மன்னர் எதிர்த்த காரணத்தால் அவரை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க உத்தேசித்திருந்த கட்சியான தாய் ரக்சா சார்ட் கட்சி தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.

மேலும் மன்னருக்கும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விஸ்வாசத்துடன் இருப்பது அவசியம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபவது நாட்டின் பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் முரணானது எனவே இது முறையற்றது என்று கருதப் படும் என மன்னர் வஜ்ராலங்கோன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென்பது குறித்து இளவரசி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் ஞாயிறு தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத் தளத்தில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவது தனது அரசியல் சாசன உரிமை என அவர் பதிவிட்டிருந்தார். மறைந்த முன்னால் தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் மூத்த மகளான உபான்ராட் அமெரிக்காவில் உயர் கல்வி கற்றவர் ஆவார். 1972 இல் அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்வதற்காகத் தனது அரச பட்டங்களைத் அவர் துறந்திருந்தார்.

2001 ஆமாண்டு மணமுறிவு ஏற்பட்ட பின் மீண்டும் தாய்லாந்து திரும்பி மன்னர் குடும்பத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்று வந்தார். சமூக ஊடகங்களில் பிரபலமான இவர் பல தாய்லாந்து மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS