உலகம்
Typography

இன்றைய உலகில் காலநிலை மாற்றத்தின் விளைவு பல்வேறு நாடுகளிலும் வித்தியாசமான தாக்கங்களை தொடர்ந்து தீவிரமாக ஏற்படுத்தியே வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நியூசிலாந்தில் கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

நெல்சன் என்ற நகரில் தொடர்ந்து 6 ஆவது நாளாகக் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது.

இதுவரை 3000 இற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். காட்டுத் தீயைக் கட்டுப் படுத்த 23 ஹெலிகாப்டர்களுடன் பல நூற்றுக் கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் காட்டுத் தீயின் வேகமும் உக்கிரமும் அதிகமாக உள்ளதால் இவர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். மேலும் தீயின் வீரியத்தை எதிர் நோக்க மேலும் 75 000 பேர் வீடுகளை விட்டு வெளியேறத் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்தக் காட்டுத் தீ தாக்கியுள்ள பிஜெயொன் வலே (Pigeon Valley )என்ற வனமானது நியூசிலாந்தின் 4 மிகப் பெரிய வனங்களில் ஒன்றாகும்.
இதேவேளை பருவ நிலை மாற்றத்தின் காரணமாக வட துருவத்தில் மட்டும் செறிந்து வாழும் துருவக் கரடிகள் அல்லது பனிக் கரடிகளில் சில ரஷ்யாவின் வடக்கே நொவாயா ஜெம்லியா என்ற தீவுப் பகுதிக்குள் டஜன் கணக்கில் நுழைந்துள்ளன. சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழும் இப்பகுதியில் அங்கிருக்கும் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுக் கட்டடங்களுக்குள் இவை நுழைந்து பொது மக்கள் சிலரைத் தாக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறு இந்தப் பனிக்கரடிகள் பொதுமக்கள் குடியிருப்புக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்பகுதியில் பொது மக்களைப் பாதுகாக்க விசேட போலிசார்கள் பனியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்