உலகம்
Typography

2008 ஆமாண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து அரபு நாடுகளின் பட்ஜெட் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இது மெல்ல மெல்ல அந்நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து விடும் என்றும் சர்வதே நாணய நிதியமான IMF இன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டைன் லெகார்டு என்பவர் எச்சரித்துள்ளார்.

துபாயில் சமீபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசுகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகள் சிலவோ நிதிப் பற்றாக்குறையில் உள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சில அரபு நாடுகளின் செலவினம் 64% வீதத்தில் இருந்து 85% வீத அளவுக்கு ஜிடிபி அதிகரித்துள்ளது. இவ்வாறு நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ள அரபு நாடுகளின் பாதிக்கும் மேலானவற்றின் செலவினம் 90% வீதத்துக்கும் மேலானதாக உள்ளது. மேலும் 2014 ஆமாண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தாக்கத்தில் இருந்து இன்னும் சில நாடுகள் மீளவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கடன் சுமையைத் தாக்குப் பிடிக்கும் வகையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகியவை அறிமுகப் படுத்தியுள்ள வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி மற்றும் உற்பத்தி வரி விதிப்பு என்பன வரவேற்கத் தக்க அம்சங்கள் என்றும் தெரிவித்த லெகார்டு ஆனாலும் இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் சவால் நிறைந்ததாகத் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துபாயின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதித்துறையானது அங்கு அரச நீதிமன்ற உத்தியோகபூர்வ மொழிகளின் பட்டியலில் அரபு, ஆங்கிலம் என்பவற்றுக்கு அடுத்ததாக ஹிந்தியைச் சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்