உலகம்
Typography

வியாழக்கிழமை தமது நாட்டுக்குள் மனித உதவி அமைப்புக்களை அனுமதிக்குமாறு வெனிசுலா இடைக்கால அதிபராகத் தன்னை அறிவித்துக் கொண்ட ஜுவான் குவைடோ அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உதவி உடனே வராவிட்டால் சுமார் 250 000 இற்கும் 300 000 இடைப்பட்ட வெனிசுலா மக்கள் மரணத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவோ அங்கு எல்லைகளை மூடுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் அடிப்படை உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வெனிசுலா மக்களை வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அண்டை நாடான கொலம்பியாவில் வெனிசுலா மக்களுக்கு உதவி மையங்களை அமைக்க ஜுவான் குவைடோ ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் அமெரிக்கா மற்றும் போர்ட்டோ ரிக்கோவில் இருந்தும் அத்தியாவசியப் பொருட்கள் வெனிசுலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்