உலகம்
Typography

சிரியா மற்றும் ஈராக்கில் ISIS தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக விடுவிக்கப் படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இப்பகுதிகளில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக 2014 ஆமாண்டில் உருவாக்கப் பட்ட 80 நாடுகளைச் சேர்ந்த கூட்டணி நாடுகளின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதன் போதே அதிபர் டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் பேசும் போது முக்கியமாக, 'ISIS இன் அடித்தளம் தகர்க்கப் பட்டு விட்டதாகவும் அவர்களது பெரும்பாலான இடங்கள் பறி போய் விட்டதாகவும் தெரிவித்ததுடன் 100% வீதம் கைப்பற்றப் பட்டு வெற்றியானது மிக விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படும்' என்றும் கூறினார். மேலும், ISIS குழுவைச் சேர்ந்த் இன்னும் சில மிகச் சிறிய அமைப்புக்கள் ஆபத்து நிறைந்தவை என்றும் வெளிநாட்டுப் போராளிகள் அமெரிக்காவை நெருங்கித் தாக்குதல் நடத்த அனுமதியொம் என்றும் தெரிவித்தார்.

இது தவிர முன்பொரு காலத்தில் ISIS மிகத் திறமையாக இணையத்தைப் பயன்படுத்தி ஆள் சேர்த்த போதும் இப்போது அதில் அவர்கள் திறமையாக இல்லை என்றும் டிரம்ப் கூறினார். இதேவேளை சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் மீளப் பெறப்பட்டாலும் ISIS இற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இதேவேளை சிரியாவில் ISIS மீது மிகத் தீவிரமான போர் தொடுக்காது போனால் இன்னும் 6 முதல் 12 மாதங்களுக்குள் அந்த அமைப்பு மறுபடி தலை தூக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS