உலகம்
Typography

உலகளவில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இவ்வருடம் 2019 ஆமாண்டுக்கான சீனப் புத்தாண்டு உற்சாகமாக இன்று செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் கொண்டாடப் பட்டு வருகின்றது.

சீனாவில் மட்டுமன்றி உலகளவில் சீனர்கள் செறிந்து வாழும் ஹாங்கொங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் சீனப் புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது.

இவ்வருடம் சீனப் புத்தாண்டின் அடையாளச் சின்னமாக பன்றி அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் தமது வீடுகளில் பன்றி வளர்க்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக வசந்த காலத் தொடக்கத்தில் சந்திர நாட்காட்டிப் படி சீனப் புத்தாண்டு கொண்டாடப் படுகின்றது. முக்கியமாக சீனப் புத்தாண்டின் போது சிங்க நடனம், டிராகன் நடனம், பட்டாசுகள், குடும்ப ஒன்றினைப்பு, குடும்ப விருந்து, நண்பர்கள் மற்றும் உறவினர் வருகை, சிவப்பு நிற என்வலொப் கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இம்முறை சீனப் புத்தாண்டின் சின்னமான பன்றி நம்பிக்கையின் அடையாளம் எனப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS