உலகம்
Typography

வரலாற்றில் முதன்முறையாக பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) விஜயம் செய்துள்ளார்.

அரேபியத் தீபகற்ப நாடொன்றுக்கு முதன் முறை விஜயம் செய்துள்ள பாப்பரசர் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அபுதாபியை திங்கட்கிழமை வந்தடைந்த இவரை முடியரசர் ஷெக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வரவேற்றார்.

செவ்வாய்க்கிழமை அபுதாபியில் நடைபெறவுள்ள மத நல்லிணக்கக் கூட்டத்தில் சுமார் 120 000 பேர் பங்கேற்கவுள்ள கூட்டத்தில் போப் பிரான்சிஸும் பங்கேற்கின்றார். முன்னதாகத் தனது பயணம் ஆரம்பிக்க முன்னர் யேமென் போர் குறித்து பாப்பரசர் கவலை தெரிவித்திருந்தார். மேலும் யேமென் குழந்தைகள் பசியால் வாடுவது குறித்தும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் யேமெனில் தொடுத்துள்ள போரில் சவுதி சார்பாக ஐக்கிய அரபு இராச்சியமும் போரில் பங்கேற்று வருகின்றது. இந்நிலையில் யேமென் பிரச்சினை குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பாப்பரசர் பேசுவாரா என்பது குறித்துத் தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS