உலகம்
Typography

எமது இன்றைய பூமி மிக மோசமான இயற்கை அனர்த்தங்களை விளைவித்து வருகின்றது.

ஒரு பக்கம் அமெரிக்காவில் கொதி நீரைக் கூட சில விநாடிகளில் உறைய வைக்கும் குளிரும் மறுபக்கம் அவுஸ்திரேலியாவில் சில இடங்களில் 50 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பமும் மனிதர்களையும், விலங்குகளையும் வாட்டி வதைத்து வருகின்றன.

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் ஜனவரி மாதம் மிக மோசமான வெப்ப கால கட்டமாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது 50 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகச் சென்றுள்ளது. மேலும் கடந்த 100 ஆண்டுகளில் நாடு முழுவதும் வெப்பம் 1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. அங்கு வீசும் அனல் காற்றுடன் அவுஸ்திரேலியா தாஸ்மானியா தீவில் வறண்ட சூழல் நிலவுவதால் அங்கு காட்டுத் தீயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவாததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

வெப்பநிலையின் தாக்கத்துக்கு சில மனிதர்களும் பெருமளவிலான கால்நடைகள் மற்றும் டார்லிங் நதியில் ஏராளமான மீன்கள் என அனைத்தும் உயிர் துறந்து வருகின்றன. இது அவுஸ்திரேலியாவில் சுற்றுச் சூழல் வறட்சிக்கும், உயிரினங்களின் பேரழிவுக்கும் வழிவகுத்து வருவதால் அங்கு காலநிலை ஆராய்ச்சியாளர்கள் ஏனைய நாடுகள் முன்கூட்டியே இதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதிலுக்கு அமெரிக்காவிலோ இதற்குத் தலைகீழான காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது துருவச் சுழல் என்ற நிகழ்வு காரணமாகப் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவிவும், குளிர் காற்றும் வீசி வருகின்றது. உறைய வைக்கும் குளிருக்கு அங்கு வெப்ப நிலை சில இடங்களில் - 30 டிகிரி மற்றும் - 40 டிகிரி செல்சியஸையும் கடந்து சென்று விட்டது. இதனால் கொதிக்கும் நீரை காற்றில் வீசினால் கூட சில விநாடிகளில் அது உறைந்து விடும் சூழல் சில இடங்களில் நிலவியுள்ளது.

உறைய வைக்கும் குளிருக்கு அமெரிக்காவின் மையப் பகுதிகளில் பலர் பலியாகி உள்ளனர். மேற்கு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த துருவச் சுழலால் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்