உலகம்
Typography

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திடீரென சீனாவுக்கு செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளார்.

3 நாள் நீடிக்கும் அரசமுறைப் பயணம் இது என வடகொரிய ஊடகம் தெரிவித்துள்ளது. தனது மனைவி ரீ சோல் ஜு மற்றும் கிம் இற்குப் பக்க பலமாக இருக்கும் யோங் ஜோல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் திங்கட்கிழமை ரயிலில் புறப்பட்டு சீனத் தலைநகர் பீஜிங்கை கிம் வந்தடைந்தார்.

கிம் இன் வருகையினை ஒட்டிப் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டிருந்ததுடன் ரயில் நிலையத்தில் கிம் இற்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப் பட்டது. அண்மைக் காலமாக அடிக்கடி சீனாவுக்கு கிம் ஜொங் விஜயம் செய்து வரும் நிலையில் சமீபத்திய திடீர் சீனப் பயணம் கிம் இற்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே ஒழுங்காகி வரும் 2 ஆவது சந்திப்பில் தாக்கத்தை செலுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

தற்போது வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் சீனாவில் முகாமிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கிம் பதவியேற்றதன் பின் முதன் முதலாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்குச் சென்றிருந்தார். இன்றைய நிலையில் வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா வணிக மற்றும் அரசியல் பிணைப்பை வடகொரியாவுடன் மிகவும் வலுப் படுத்தி வரும் ஒரே நாடாகவும் திகழ்கின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்