உலகம்
Typography

3 ஆவது தரப்பு உதவியின்றி காஷ்மீரில் நிலவும் பதற்ற நிலையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என நோர்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் முன்னால் பிரதமர் க்ஜெல் மாக்னே பொண்டெவிக் என்பவரது காஷ்மீர் விஜயமும் அவரின் தனிப்பட்ட அணுகுமுறைகளைப் பொறுத்து இருந்தது என்றும் எர்னா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நியூடெல்லியில் இருந்து அவர் ஊடகப் பேட்டிக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய வல்லமை உடைய நாடுகள். எனவே அவற்றுக்கிடையே உள்ள பிரச்சினையை அல்லது பதற்றத்தை வெளியில் உள்ள சக்தி ஒன்றின் துணையின்றி தணிக்கவும் அவற்றால் முடியும் என்றும் கூறினார். மேலும் மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பில் எமது உதவியை யாரும் நாடினால் ஒழிய நாம் யாருக்கும் உதவச் செல்லப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடந்த வருடம் நவம்பரில் பொண்டேவிக் இனது சந்திப்பில் தமது பங்கு இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப் படுத்தியுள்ளார். பொண்டேவிக் தனது விஜயத்தின் போது மூத்த பிரிவினைவாதத் தலைவர்களான சையட் அலி கீலானி மற்றும் மிர்வாயிஸ் உமெர் ஃபரூக் ஆகிய இருவரையும் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நோர்வேயின் பிரதமர் எர்னா 3 நாள் விஜயமாக ஜனவரி 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இந்தியாவை வந்தடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்