உலகம்
Typography

சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல்கொய்தா தீவிரவாத கிளை அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு 120 துருக்கி ஆதரவுக் கிளர்ச்சிப் படையினர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

2011 முதல் சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் ISIS தீவிரவாதிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒழிக்க சிரிய அரசுக்குச் சார்பாக ரஷ்ய வான்படை போரில் ஈடுபட்டு வருகின்றது.

இவர்களுடன் துருக்கி படைகளும் அரச படைகளுடன் இணைந்து தரைவழிப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அல்கொய்தா கிளை அமைப்பான ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பு துருக்கி ஆதரவு பெற்ற அல் ஜென்கி என்ற கிளர்ச்சிப் படையுடன் கடும் மோதலில் 5 நாட்களாக ஈடுபட்டனர். இதில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 120 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக வலுப்பெற்று வரும் அல் ஷாம் தீவிரவாத அமைப்பினர் அலெப்போவில் மாத்திரம் 23 கிராமங்கள் அல்லது நகரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவர்களைத் தடுத்து நிறுத்த துருக்கியாலோ அல்லது சிரியாவாலோ இதுவரை முடியவில்லை என இலண்டனைத் தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்