உலகம்
Typography

6 வருடங்களுக்கு முன்பு 2012 இல் காணாமற் போய் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்ட மும்பையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஹமிட் நெஹால் அன்சாரி இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

மேலும் வாகாஹ் எல்லையைக் கடந்து அவர் இந்தியாவை வந்தடைந்து தனது பெற்றோர்களையும் சந்தித்துள்ளார். இந்தியாவில் வெளிவந்த 'வீர் ஷாரா' என்ற பாலிவுட் படப் பாணியில் நிஜத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உதவியினால் தான் அன்சாரி அங்கு சிறையில் இருப்பது தெரிய வந்தது.

ஆன்லைன் மூலம் ஆப்கான் பெண் ஒருவரைக் காதலித்த அன்சாரி அவர்ஃஇச் சந்திக்க ஆப்கானிஸ்தான் சென்ற போதே பாகிஸ்தான் எல்லையில் கைது செய்யப் பட்டுள்ளார். இவர் சிறையில் இருப்பதை 3 வருடம் கழித்து 2015 இல் தான் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருந்தது. இவர் சிறையில் இருந்த போது 96 முறை வழக்கறிஞர் சந்திப்பை பாகிஸ்தான் நிராகரித்து இருந்தது.

ஆயினும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அன்சாரியுடனும் அவரின் தாயுடனும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தித் தந்து அன்சாரியை விடுவிக்கக் கடும் முயற்சி செய்தது. இதன் பலனாக தற்போது அன்சாரி விடுவிக்கப் பட்டுள்ளார். ஆயினும் இன்றைய திகதியில் பாகிஸ்தான் சிறையில் இன்னமும் 400 இந்திய மீனவர்கள் வாடுவதாகவும் இவர்களுக்கும் இந்திய அதிகாரிகள் நேரில் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்