உலகம்
Typography

அண்மையில் அமெரிக்க செனட் சபையில் பத்திரிகையாளர் கசோக்ஜியின் கொலைக்கு சவுதி அரசின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் மீது குற்றம் சுமத்தித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

மேலும் யேமென் உள்நாட்டுப் போரில் சவுதிக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாக்களிப்பு நடத்தப்பட்டு ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது. இவ்விரு நடவடிக்கைகளும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமெரிக்கா மேற்கொண்ட செயல்கள் என சவுதி வெளியுறவு அமைச்சகம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளது.

சவுதியின் அடாவடியான செயல்களுக்கு எதிரான அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களின் பிரநிதிகளான எம்பிக்களின் கோபத்தை அதிபர் டிரம்புக்கு வெளிக்காட்டும் நோக்கிலானது தான் செனட்டின் இந்நடவடிக்கை என்று கருதப்படும் நிலையில் கடந்த வியாழன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் சட்டமாவதற்கு வாய்ப்பில்லை எனவும் கருதப்படுகின்றது. சவுதியின் இந்த கண்டன நடவடிக்கைக்கு அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை.

ஆயினும் அமெரிக்காவின் 1973 போர் அதிகார சட்டத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானமாகக் கருதப் படும் செனட் சபையின் இந்நடவடிக்கையில் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பலரும் கூட வாக்களித்து 56-41 என்ற கணக்கில் நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS