உலகம்
Typography

ஐரோப்பியா யூனியனுடனான பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு முற்றியதை அடுத்து சமீபத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் முடிவு செய்திருந்தனர்.

புதன்கிழமை இது தொடர்பில் 48 ஆளும் கட்சி எம்பிக்கள் கட்சித் தலைவரிடம் கடிதம் சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரேசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 117 எம்பிக்களும், எதிராக 200 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனால் 63% வீத வாக்குகள் பெரும்பான்மையுடன் தெரேசா மே இன் பதவி தப்பியது. வாக்கெடுப்பின் ஊடகப் பேட்டியில் தெரேசா மே உரையாற்றும் போது, 'பிரிட்டன் மக்களுக்கு மிகச் சிறந்த பிரெக்ஸிட்டை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு நல்ல எதிர் காலத்தை ஏற்படுத்தித் தருவோம்.' என்றார். மேலும் இந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்திலுள்ள சர்ச்சைக்குரிய அம்சங்கள் குறித்தும் தான் ஐரோப்பிய யூனியனுடன் விவாதிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

1973 முதல் 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகித்து வருகின்றது. எனினும் ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற ஐரோப்பிய யூனியனின் போக்கை விரும்பாத பிரிட்டன் தனது தனித்துவ மற்றும் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக கடந்த 2016 ஜூன் மாதம் குறித்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்பை நடத்தியது.

பிரெக்ஸிட் எனப்படும் இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களார்கள் இதாற்கு ஆதரவு தெரிவித்த போதும் இன்று வரை இந்த விவகாரம் அரசியல் சிக்கல்களால் இழுபறியாக இருந்து வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்