உலகம்
Typography

அண்மையில் துருக்கி நாட்டு சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்ஜி என்ற சவுதி பத்திரிகையாளர் சவுதி அரேபியாவின் மர்ம நபர்கள் மூலம் படுகொலை செய்யப் பட்டார்.

ஜனநாயகத்துக்கு எதிரான உலகை உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து சவுதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் மீது சர்வதேசத்தால் கடும் விமர்சனமும் குற்றச்சாட்டும் எழுப்பப் பட்டது. ஆனால் இந்தக் கொலைச் சம்பவத்தில் இளவரசர் மீது எந்தத் தொடர்பும் இல்லை என சவுதி மறுத்துரைத்து வந்தது.

இந்நிலையில் தான் சவுதியின் இந்த செயற்பாட்டுக்குப் பதிலடியாக யேமென் உள்நாட்டுப் போரில் சவுதிக்கு அமெரிக்கா அளித்து வரும் இராணுவ ஆதரவை விலக்கிக் கொள்வது என அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது. இந்த வாக்கெடுப்பு அமெரிக்காவின் 1973 போர் அதிகாரங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப் பட்ட முதல் வாக்கெடுப்பு எனவும் தெரிய வருகின்றது.

இத்தீர்மானம் ஒரு கண் துடைப்பாக இருக்கலாம் என்றும் கருதப் பட்ட நிலையில் இதை நிறைவேற்றி 2 ஆவது தீர்மானத்தில் கஷோக்ஜியின் கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டும் ஒரு மனதாக செனட் சபையில் நிறைவேற்றப் பட்டது. இதேவேளை கடந்த மாதம் தான் சவுதி அரேபியாவின் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை அமெரிக்கா நிறுத்திக் கொண்டிருந்ததால் குறித்த செனட் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானம் சட்டமானால் இந்த எரிபொருள் விவகாரம் மேலும் தீவிரமடையவுள்ளது.

இன்றைய உலகில் மிகவும் வறிய அரபு நாடான யேமெனில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரும் அதனால் அங்கு ஏற்பட்டுள்ள மனித அவலமும், அதன் சனத்தொகையில் 80% வீத பொது மக்களை உணவு உதவியை எதிர்பார்க்கும் சூழலிலும் சுமார் 2.5 மில்லியன் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்த நிலையிலும் வாழுமாறு செய்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்