உலகம்
Typography

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸின் ஸ்டராஸ்பர்க் நகரத்தின் கிறித்துமஸ் சந்தையில் ஷெரீப் சேகத் எனும் 29 வயதாகும் நபர் ஒருவர் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தாய்லாந்து சுற்றுலாப் பயணி உட்பட 3 பேர் பலியாகி இருந்தனர்.

இச்சம்பவத்தில் மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனை நிகழ்த்தி விட்டுத் தப்பிச் சென்ற குறித்த நபரை சுமார் 700 பிரெஞ்சு போலிசார் தனிப் படை அமைத்துத் தேடி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை நியோடார்ப் என்ற நகரத்தில் வைத்து ஷெரீப் சேகத் சுட்டுக் கொல்லப் பட்டு விட்டதாகப் போலிசார் அறிவித்துள்ளனர். குறித்த நபர் கண்டு பிடிக்கப் பட்ட போது அவர் உயிர் தப்பிப்பதற்காகப் போலிசாரை நோக்கிச் சுட்டதாகவும் பதிலுக்கு போலிசார் திருப்பிச் சுட்டதில் அவர் தலத்திலேயே கொல்லப் பட்டதாகவும் கூடத் தெரிய வருகின்றது.

இந்த வீரதீர செயலுக்காக பிரெஞ்சு போலிசாரை அந்நாட்டு அரசாங்கம் பாராட்டியுள்ளது. இதேவேளை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ISIS தீவிரவாதிகள் பொறுப்பேற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS