உலகம்
Typography

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று நியூயார்க்கில் விடப்பட்ட ஏலத்தில் 2.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

1954ஆம் ஆண்டு ஜெர்மன் தத்துவ அறிஞர் எரிக் குட்கைண்டுக்கு ஒன்றரை பக்க கடிதமாக ஐன்ஸ்டீனால் எழுதப்பட்டிருக்கிறது. 'கடவுள் கடிதம்' என அழைக்கப்படும் அந்த கடிதத்தில் இறை நம்பிக்கை குறித்து அவர் விவரித்து இருக்கிறார். மதம் சார்ந்த பல விவாதங்களை முன்வைத்து எழுதியிருக்கும் அவர் 'இறைவன் என்ற வார்த்தை எனக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், மனித பலவீனத்தின் வெளிபாடு அது' என்று விவவரித்துள்ளார்.

ஜெர்மனி மொழியில் கைழுத்துப்பிரதியாக எழுதப்பட்டிருக்கும் இந்த கடிதம் நியூயார்க்கில் விடப்பட்ட ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிக தொகையாக 2.9 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ10 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS