உலகம்
Typography

அமெரிக்காவின் 41 ஆவது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 ஆமாண்டு வரை பதவி வகித்த சீனியர் புஷ் என்றழைக்கப் படும் ஜோர்ஜ் HW புஷ் தனது 94 ஆவது வயதில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஹுஸ்டனில் வைத்து மரணித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் மற்றும் பார்கின்ஸன் நோயால் பாதிக்கப் பட்டு வந்த அவர் சக்கர நாற்காலியில் தான் பயணித்து வந்தார்.

இந்நிலையில் இவரின் மரணத்தால் இவரது மகனும் முன்னால் அதிபருமான ஜோர்ஜ் w புஷ் மற்றும் புஷ் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தனது தந்தையின் மரணச் செய்தியை முன்னால் அதிபர் ஜோர்ஜ் W புஷ் அறிவித்தார். மரணமடைந்த சீனியர் புஷ் 2 ஆம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்கக் கடற்படையில் விமானியாகப் பணியாற்றியவர் ஆவார். அமெரிக்க முன்னால் அதிபர் ரொனால்டு ரீகன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது சீனியர் புஷ் இருமுறை துணை அதிபராகப் பதவி வகித்திருந்தார்.

மேலும் சீனியர் புஷ் பதவியில் இருந்த போது மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட 90% வீதம் செல்வாக்குப் பெற்றும் இருந்தார். எனினும் இவர் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடாது இருந்து விட்டார் என்றும் இவர் மீது அவப் பெயர் உண்டு. 1992 ஆமாண்டு அதிபர் தேர்தலில் இவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பில் கிளிங்டனிடம் தோல்வியைத் தழுவியிருந்தார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த அனைவரிலும் அதிக காலம் உயிர் வாழ்ந்த அதாவது 94 வயது வரை வாழ்ந்த ஒரே அதிபர் ஜோர்ஜ் சீனியர் புஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனியர் புஷ் மற்றும் காலம் சென்ற பார்பரா புஷ் தம்பதியினருக்கு மொத்தம் 6 குழந்தைகள், 17 பேரக் குழந்தைகள் மற்றும் 8 கொள்ளுப் குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் மற்றும் முன்னால் அமெரிக்க அதிபர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்