உலகம்
Typography

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரலாறு காணாத கனமழையும் அதனால் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மிக வேகமாகப் பரவி வரும் கடும் காட்டுத் தீயாலும் பெரும் அழிவு ஏற்பட்டு வருகின்றது.

குயின்ஸ்லாந்தில் கடந்த ஒரு வாரமாக மிக வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயினால் இதுவரை சுமார் 22 ஹேக்டருக்கும் அதிகமான நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளது. வனப்பகுதிக்கு அருகே இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சியால் தற்போது தீ ஒரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதேவேளை சிட்னி நகரில் சமீபத்தில் பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இதுவரை இந்த அனர்த்தத்தில் மூவர் மரணித்துள்ளதாகவும் மீட்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாககவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

சிட்னியில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அதாவது 118 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடும் வெள்ளம் காரணமாக ரயில் சேவை, சுரங்க ரயில் சேவைகள் யாவும் முடங்கியுள்ளன. பல விமான சேவைகளும் ரத்து செய்யப் பட்டுத் திருப்பி விடப் பட்டுள்ளன. பெரும்பாலான பொது மக்கள் வீட்டுக்குள் அடைப்பட்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிட்னியில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்