உலகம்
Typography

அண்மையில் வெளியான சர்வதேச அறிக்கை ஒன்றில் உலகில் உள்ள 150.8 மில்லியன் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளில் 1/3 பங்கு அதாவது 46.6 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2005 மற்றும் 2006 காலப் பகுதியில் பட்டினியாலும், போசாக்கின்மையாலும் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவ இந்தியா கடும் நடவடிக்கை எடுத்த நிலையிலும் தான் இந்தப் பூகோள ஊட்டச்சத்து அறிக்கையின் புள்ளி விபரம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. இந்தப் புள்ளி விபரத்தில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் 13.9 மில்லியன் குழந்தைகளுடன் நைஜீரியாவும் அதற்கடுத்த நிலையில் 10.7 மில்லியன் குழந்தைகளுடன் பாகிஸ்தானும் காணப் படுகின்றன.

இதைவிட இந்தியாவில் 25.5 மில்லியன் குழந்தைகள் வயதுக்கேற்ற நிறையுடையதாக அல்லாது வலுவிழந்து காணப் படுவதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 50.5 மில்லியன் குழந்தைகள் மிகவும் நலிவடைந்தும் 38.3 மில்லியன் குழந்தைகள் மிகவும் அதிக நிறையுடனும் காணப் படுவதாகவும் குறித்த அறிக்கை கூறுகின்றது. சுமார் 141 நாடுகளில் மேற்கொள்ளப் பட்ட இந்தப் புள்ளி விபரத்தில் 124 நாடுகளில் போசாக்கின்மை குறைபாடு ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்