உலகம்
Typography

ஆர்ஜெண்டினா தலைநகர் பியோனஸ் அஜெர்ஸில் இன்று வெள்ளிக்கிழமை ஜி20 நாடுகளின் 2018 ஆமாண்டுக்கான உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் G20.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுக் கொள்கின்றனர். மேலும் இன்றைய உலகை அச்சுறுத்தும் முக்கிய விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இம்மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோரை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்த முத்தரப்புச் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு ஜப்பான் கடல் விவகாரம் குறித்தும் பேசப் படவுள்ளது.

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதால் இம்முறை ஜி20 மாநாடு எமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சவுதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசியுமுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்