உலகம்
Typography

ஆக்டோபரில் இந்தோனேசியக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து அண்மையில் கண்டு பிடிக்கப் பட கருப்புப் பெட்டியின் மூலம் ஆதாரம் சிக்கியுள்ளது.

போயிங் விமானத்தின் முன்னால் பொறியியலாளர் மற்றும் செயற்கைக்கோள், விமானப் போக்குவரத்துத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவருமான பீட்டர் லேமே தலைமையிலான குழு ஒன்று இந்தக் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் பழுதடைந்த விமானத்தை ஒழுங்காக கண்காணிக்காது பயணத்துக்கு உட்படுத்தியது தான் விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அதாவது விமானத்தின் தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்த காரணத்தால் விமானத்தின் மூக்குப் பகுதி கீழ் நோக்கி இழுக்கப் பட்டுள்ளது. விமானத்தின் கேப்டன் பலமுறை மேல் நோக்கி தூக்கிப் பறக்க முயற்சித்தும் பலன் ஏற்படவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் 26 முறை இதே போன்று விமானத்தை மேல் நோக்கிப் பறக்க வைக்க பைலட் முயன்றுள்ள போதும் விமானம் டைவ் அடித்துள்ளது. இதனால் எதுவும் செய்ய முடியாத கேப்டன் நூற்றுக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய குறித்த விபத்தைத் தவிர்க்க முடியாது போயுள்ளது.

குறித்த விமானத்தின் பழுது குறித்து போயிங்க் நிறுவனத்துடன் செய்தியாளர்களும், அதிகாரிகளும் தொடர்பு கொள்ள பல முறை முயன்ற போதும் அந்நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS