உலகம்
Typography

தென்மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே 20 000 Km தொலைவில் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட நாடான நியூ கலெடோனியாவில் சுதந்திர வாக்கெடுப்பு நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்று அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதன்படி அதிகபட்சமாக 56.4% வீதமான மக்கள் பிரான்சின் ஒரு பகுதியாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எதிராக 43.6% வீதமானவர்கள் பிரிந்து சென்று சுதந்திர தனி நாடாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 1988 ஆமாண்டு ஒப்பந்தப் படியிலான வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் நடத்தப் பட்ட இந்த வாக்கெடுப்பில் 81% வீதமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்தத் தேர்தல் முடிவானது பிரான்ஸின் குடியரசின் மீது நியூ கலெடோனியா மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நியூ கலெடோனியாவில் அண்மையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு பெரும்பாலும் அமைதியாகவே இடம்பெற்றாலும் வாக்குப் பதிவு முடிந்த பின்பு சில இடங்களில் அமையின்மை ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக தலைநகர் நைவ்மியாவில் வாகனங்கள் சிலவற்றுக்கும், கடைகளுக்கும் தீ வைக்கப் பட்டுள்ளது. சில சாலைகளும் அடைக்கப் பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலரை பிரான்ஸிடம் இருந்து பெற்று வரும் நீயூ கலெடோனியா தீவின் பெரும்பான்மை கானக்ஸ் மக்களில் சிலரும் பிரான்ஸுடன் இணைந்திருக்கவே விரும்புவதாக இந்தத் தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது.

இதேவேளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாகக் கருதப் படும் இடைக்காலத் தேர்தல்களில் அங்கு மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். முதலாவதாக கிழக்குக் கடற்கரை பகுதி மாகாணங்களான நியூ ஹெல்ப்ஷைர், நியூ ஜெர்ஸி மற்றும் நியூயோர்க் ஆகிய பகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இம்முறை இடைக்காலத் தேர்தலில் அதிகளவு வாக்குப் பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்த இடைக்காலத் தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் மற்றும் செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்