உலகம்
Typography

பொதுவாக நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற கடும் இயற்கைச் சீற்றங்களுக்கு அடிக்கடி உள்ளாகும் நாடான ஜப்பானில் வடக்கே உள்ள சிறிய தீவு ஒன்று திடீரென காணாமற் போயுள்ளது.

இது ஜப்பான் புவியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இத்தீவு நிலநடுக்கம் காரணமாக நீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதப் படுகின்றது.

1987 இல் கண்டுப்பிடிக்கப் பட்ட இத்தீவுக்கு இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்று பெயரிடப் பட்டுள்ளது. அண்மையில் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து கண்ணுக்குத் தெரிந்த இத்தீவு கடல் மட்டத்தில் இருந்து 1.4 மீட்டர் உயரத்தில் இருந்ததாகவும் கணிக்கப் பட்டிருந்தது. 2004 ஆமாண்டு இந்தோனேசியாவுக்கு அருகே இந்து சமுத்திரத்தில் 9 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எழுந்த பாரிய சுனாமி அனர்த்தத்தில் தீவு ஒன்று சில கிலோ மீட்டர்கள் நகர்ந்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில தீவுகள் திடீரென மறைந்து போனால் அவற்றின் கனிம வள ஆதாரங்களை இழக்கும் தேசத்துக்கு அது ஒரு முக்கியமான இழப்பாகும். இவ்வகையில் தான் ஜப்பான் தனது ஒகினோடோரி தீவுகளைத் தனிச் சிறப்பான பொருளாதார மண்டலமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இதேவேளை கடும் பூகம்பங்கள் மற்றும் சுனாமி போன்றவற்றால் சில புதிய தீவுகள் அல்லது நிலப் பரப்புக்கள் தோன்றுவதும் உண்டு. 2015 ஆமாண்டு இது போன்று தான் 300 மீட்டர் பரப்புடைய ஒரு நிலத் தொகுதி ஹொக்காடியோ தீவுப் பகுதியில் தோன்றியிருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்