உலகம்
Typography

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து தலிபான்களின் ராஜகுரு அல்லது தந்தை என்று கருதப் படும் மௌலானா சமியுல் ஹக் என்பவர் இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறித்தவப் பெண் விடுவிக்கப் பட்டமைக்காக வீதிகளில் எதிர்ப்பும் கொந்தளிப்பும் இடம்பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

83 வயதாகும் ஹக் 90 களில் ஆப்கான் தலிபான் இயக்கத்தில் சேர்ந்த நூற்றுக் கணக்கான இளம் தலிபான்களுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். இதில் பலம் பொருந்திய தலிபான் தலைவர்களில் ஆப்கான் தலிபான்களின் தாபகர் முல்லாஹ் ஒமரும் அடங்குகின்றார். இந்நிலையில் ஹக்கின் மகனான ஹமிட் உல் ஹக் தகவல் அளிக்கையில் தனது தந்தை படுக்கை அறையில் வைத்து பல முறைகள் கத்தியால் குத்தப் பட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மௌலானா சமியுல் ஹக் தலிபான்களின் தந்தை மட்டுமன்றி பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதவாதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எகிப்தின் மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறித்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ISIS தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்