உலகம்
Typography

வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள யோகா மையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

6 பேரைத் துப்பாக்கியால் சுட்ட இவரை அங்கிருந்த உறுப்பினர்கள் திருப்பித் தாக்கியதை அடுத்து துப்பாக்கி தாரி தற்கொலை செய்து கொண்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரியுடன் சேர்த்து இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

மாலை 5:37 மணிக்கு புளோரிடா தலைநகர் தல்லாஹஸ்ஸேயிலுள்ள யோகா ஸ்டூடியோவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியைத் தடுத்து நிறுத்த் அவரை நோக்கி விரைந்து சென்ற ஒரு நபர் தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். இது தவிர பல மக்கள் தம்மை மட்டுமல்லாது பிறரைக் காப்பாற்றவும் முயற்சி செய்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தனியாகவே செயற்பட்ட துப்பாக்கி தாரியின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நபர் மனநலம் பாதிக்கப் பட்டவராக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப் படும் நிலையில் புளோரிடாவில் வசிக்கும் குறித்த மக்கள் சமூகத்துக்கு இனிமேல் அச்சுறுத்தல் இல்லை எனப் போலிசார் அறிவித்துள்ளனர். தற்போது காயமடைந்த பொதுமக்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்