உலகம்
Typography

அண்மையில் 2019 ஆமாண்டு உலகில் வியாபாரம் மேற்கொள்ளத் தகுதியான நாடுகளின் வருடாந்த பட்டியலை உலக வங்கி வெளியிட்டது.

இதில் இந்தியா கடந்த வருடம் 100 ஆவது இடத்தில் இருந்து இவ்வருடம் 77 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சீனாவோ உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியை எட்டியுள்ளது. சுமார் 190 பொருளாதார நாடுகளில் மேற்கொள்ளப் பட்ட இக்கணிப்பில் சோமாலியா கடைசி இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களை நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் ஆகியவை பிடித்துள்ளன. உலகளாவிய வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரெக்ஸிட் திட்டம் காரணமாக பிரிட்டனும் இப்பட்டியலில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளன.

இப்பட்டியலில் 78 ஆவது இடத்தில் இருந்து 46 ஆவது இடத்துக்கு முன்னேறிய சீனா முதன் முதலாக 50 ஆவது இடத்துக்குள் வந்துள்ளது. இதேவேளை உலகின் சக்தி வாய்ந்த கடவுச் சீட்டினைக் கொண்டிருக்கும் 165 நாடுகளின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

இதில் முதலிடத்தில் சிங்கப்பூரும் அடுத்தடுத்த இடங்களில் முறையே ஜேர்மனி, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகியவையும் உள்ளன. இந்தியாவின் கடவுச்சீட்டு இப்பட்டியலில் 66 ஆவது இடத்திலுள்ளது. ஆப்கானிஸ்தானின் கடவுச்சீட்டு கடைசி இடத்திலுள்ளது. பாகிஸ்தானின் கடவுச் சீட்டும் உலகில் சக்தி வாய்ந்த கடவுச் சீட்டுக்களின் பட்டியலில் மிகவும் பின் தங்கிய இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்