உலகம்
Typography

மெக்ஸிக்கோவில் இருந்து பேரணியாக அமெரிக்காவுக்குள் குடிபுகவென பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவாமால் இருப்பதற்கு அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுமார் 15 000 இராணுவத்தினர் அமெரிக்க மெக்ஸிக்கோ எல்லையில் குவிக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க மெக்ஸிக்கன் எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 15 000 இராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பணியாற்றி வரும் சுங்க இலாகா ஊழியர்கள் மற்றும் எல்லைக் காப்புப் படையினருக்கு உதவியாகச் செயற்பட்டு வருகின்றனர். மெக்ஸிக்கன் எல்லையில் குவிக்கப் பட்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் குவிக்கப் பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதனால் அதிபர் டிரம்ப் தனது சுய இலாபத்துக்காக இப் படை நகர்வை மேற் கொண்டுள்ளார் எனக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் வெறும் 7000 படைகளை மாத்திரமே மெக்ஸிக்கன் எல்லைக்கு அனுப்பும் முடிவில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்