உலகம்
Typography

ஜப்பான் இளவரசியான 28 வயதாகும் அயகோ தனது காதலர் கெய் மோரியாவினை புதன் கிழமை தலைநகர் டோக்கியோவின் மெய்ஜி ஷெரின் புனிதத் தலத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

அரச குடும்பத்தினரின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஏனையவர்களும் கலந்து கொண்டனர்.

ஜப்பான் சட்டப் படி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாமானியர் ஒருவரை மணந்தால் அரச பட்டத்தையும், சொத்துக்களையும் துறக்க வேண்டும். ஆனால் காதலே முக்கியம் என்று கருதித் தனது பட்டத்தைத் துறந்து தன் காதலர் கெய் மோரியாவினைத் திருமணம் செய்து ஜப்பான் மக்கள் அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளார் இளவரசி அயகோ. ஜப்பான் பேரரசர் அக்டோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான இளவரசி அயகோ, 2013 ஆமாண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தில் படித்த போது அங்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய 32 வயதாகும் கெய் மோரியோ என்பவர் மீது காதல் வயப் பட்டார்.

இதைத் தொடர்ந்து தன் காதலைச் சிறிதும் தயக்கமின்றி குடும்பத்தினருக்குத் தெரிவித்து அவர்கள் சம்மதத்துடன் கெய் மோரியோவைக் கரம் பி1டித்துள்ளார் இளவரசி அயகோ.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்