உலகம்
Typography

மாலைத்தீவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபர் முகமது நஷீத் தனது ஆட்சிக் காலத்தில் 2012 ஆமாண்டு நீதிபதி ஒருவரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

இது ஒரு தீவிரவாதக் குற்றமாகக் கருதப் பட்டு 2015 ஆமாண்டு அவருக்கு 13 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. சரியான முறைப்படி நடைபெறாத இந்த வழக்கு விசாரணைக்கு சர்வதேசம் கடும் விமரிசனம் தெரிவித்திருந்தது.

முன்னதாக சிறையில் இருந்து இங்கிலாந்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற முகமது நஷீத் தொடர்ந்து சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க கடந்த இரு வருடங்களாக இலங்கையில் தஞ்சம் புகுந்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மாலைத் தீவில் நடந்த அதிபர் தேர்தலில் யாமீன் அப்துல் கயூம் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து தாயகம் திரும்ப முகமது நஷீத் முடிவு செய்தார்.

மேலும் இன்று வியாழக்கிழமை இலங்கையில் இருந்து மாலைத் தீவை வந்தடைந்த அவரை அவரின் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வரவேற்றனர். மாலைத்தீவின் சுப்ரீம் நீதி மன்றம் இவரது வழக்கை எடுத்து விசாரிக்கும் வரை இவருக்கு வாரண்டு பிறப்பித்து இரு தினங்களுக்குள் தான் முகமது நஷீத் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய நஷீத் இனை விமான நிலையத்தில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட இப்ராஹிம் மொஹமெட் சோலிஹ் மற்றும் நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.

மாலைத் தீவின் புதிய அரசாங்கத்தில் நஷீத்துக்கு என்ன பதவி வழங்கப் படலாம் என இன்னமும் தெரிய வரவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்