உலகம்
Typography

சுமார் 2 வருடங்களாக ஐ.நா இற்காக அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றி வந்த நிக்கி ஹலே என்ற பெண்மணி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹலேயின் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் நிக்கி ஹலே மிகவும் ஆச்சரியத்தக்க பணியை ஆற்றியுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போது 46 வயதினை நிறைவு செய்துள்ள நிக்கி ஹலே தெற்கு கரோலினாவின் முன்னால் ஆளுனராகவும் பணியாற்றியவர் ஆவார். டிரம்பின் அமைச்சரவையில் உள்ள மிகவும் சொற்பமான ஒரு சில பெண்களில் ஒருவரான ஹலே தனது ராஜினாமாவுக்கான காரணத்தை இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் இவர் 2020 ஆமாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எழுந்துள்ள ஊகங்களை மறுத்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு சில வாரங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் புதிய தூதரின் பெயரை அறிவிக்கவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெறிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் மூத்த அதிகாரியான நிக்கி ஹலே 2024 ஆமாண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் எனப் பரவலாக எதிர் பார்க்கப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்