உலகம்
Typography

அணுவாயுதங்களை சுமந்து கொண்டு சுமார் 1300 Km தூரம் வரை சென்று தாக்கக் கூடிய அதி நவீன கவுரி ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்பிரலில் தான் 700 Km தூரம் சென்று தாக்கும் பாபர் என்ற உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட ஏவுகணையைப் பாகிஸ்தான் பரிசோதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான கவுரி திங்கட்கிழமை பரிசோதிக்கப் பட்டது. இந்த ஏவுகணை மூலம் அணுவாயுதங்களைக் கொண்டு இந்தியாவின் பல முக்கிய நகரங்களைத் தாக்கக் கூடிய ஆற்றலைப் பாகிஸ்தான் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கவுரி ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப் பட்டதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் குறித்த விஞ்ஞானிகளுக்கும், பொறியியலாளர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதி நவீன வான் இயக்கவியல் மற்றும் ஆவியோனிக்ஸ் தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்ட இந்த கவுரி ஏவுகணை தரை மற்றும் கடலில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகச் சென்று தாக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்