உலகம்
Typography

அமெரிக்காவில் முன்னதாக 3 பெண்களால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரெட் கவனாக் என்பவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன் 114 ஆவது நீதிபதியாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருந்தார்.

ஏற்கனவே பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்த பிரெட் கவனாக் இனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்ததற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

ஆனால் இவர் நீதிபதி ஆவதற்கு குடியரசுக் கட்சி கடும் முயற்சி செய்தது. இதன் விளைவாக செனட் சபையில் இது தொடர்பில் ஓட்டெடுப்பு நிகழ்த்தப் பட்ட போது பிரெட் கவனாக் இற்கு ஆதரவாக 51 ஓட்டுக்களும் எதிராக 47 ஓட்டுக்களும் கிடைத்து மயிரிழையில் கவனாக் வெற்றி பெற்றார். மேலும் வாஷிங்டனின் சுப்ரீம் கோர்ட் கருத்தரங்க மண்டபத்தில் பிரெட் கவனாக் பதவியேற்றுக் கொண்ட போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோர்ட்டின் அருகே நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த டிரம்ப் ஊடகங்கள் இந்த செய்தியை பெரியளவில் செய்தியாக்கி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை கவனாக் மீது சுமத்தப் பட்டுள்ள பாலியல் புகார்கள் அனைத்தும் பொய்ப் பிரச்சாரம் எனத் தெரிவித்த டிரம்ப் இதற்காக அவரிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்