உலகம்
Typography

இவ்வருடம் 2018 ஆமாண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயதாகும் வில்லியம்ஸ் நார்தாஸ் மற்றும் 62 வயதாகும் பால் ரோமர் ஆகிய இரு நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்கப் படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

வில்லியம் நார்தாஸ் யேல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆவார்.

முன்னால் உலக வங்கி தலைமை பொருளாதார நிபுணரான பால் ரோமர் தற்போது நியூயோர்க் பல்கலைக் கழகத்தின் ஸ்டெர்ன் வர்த்தகக் கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். பருவ நிலை மாற்றம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புக்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நடத்தப் பட்ட ஆய்வுக்காக இவர்களுக்கு இப்பரிசு வழங்கப் படவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்