உலகம்
Typography

வானியல் ஆராய்ச்சிக்கு முக்கியமான சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான விண்கல் ஒன்றை கடந்த 30 வருடங்களாக ஒருவர் தன் வீட்டின் வாசல் கதவு அசையாது இருப்பதற்காக முட்டுக் கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஷ்யம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்கு என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் தன் வீட்டுக் கதவு அசையாது இருக்க முட்டுக் கொடுத்த ஒரு கல்லைக் கொடுத்து அதன் தன்மைகளை ஆராயக் கோரியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சுமார் 30 வருடங்களாக வெளி உலகுக்குத் தெரிய வராது இருந்த 10 கிலோ எடை கொண்ட குறித்த அதிசய கல் மிகவும் பெறுமதியான ஒரு விண்கல் என்று தெரிய வந்துள்ளது. 80 வருடங்களுக்கு முன்பு மெக்சிகனில் உள்ள எட்மோட் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இவ்விண்கல் விழுந்து பின்னர் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

சமீபத்தில் இந்த விண்கல்லை வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் ஆய்வு மையத்துக்கு மோனா சிர்பெஸ்கு அனுப்பி வைத்தார். அங்கு வைத்து இது விண்கல் என உறுதி செய்யப் பட்டதும் கோடிக் கணக்கான ரூபாய்க்கு இதன் பெறுமதி உயர்ந்து இதை வாங்கப் பலர் போட்டி போட்டு முன் வந்துள்ளனர். இந்த விண்கல்லில் 88% வீதம் இரும்பும் 12% வீதம் நிக்கலும் உள்ளன என்பதுடன் பூமியில் விழுந்து ஆராய்ச்சிக்கென எடுக்கப் பட்ட விண்கற்களிலேயே இது தான் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கல்லானது தொடக்க கால சூரிய மண்டலத்தின் அங்கம் என்றும் கூறப்படுகின்றது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்