உலகம்
Typography

வெள்ளிக்கிழமை காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் இந்தியக் குடிமக்கள் மீதே இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப் பட்டதாக பாகிஸ்தான் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதார பூர்வமற்றவை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவை புதிய குற்றச்சாட்டுக்கள் என விவரித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு மறுபடியும் தெரிவிக்கையில் இந்தியா சார்பாக எந்தவொரு நபரும், எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்திலும் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்க பூரணமான எதிர்ப்பு தொடர்ந்து கடைப் பிடிக்கப் பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவலில் காஷ்மீர் குடிமக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதற்கு பாகிஸ்தான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை பேச்சாளர் மொஹம்மட் ஃபைசல் கருத்துத் தெரிவிக்கையில் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு அமைவாகத் தான் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதே எமது தேவை என்றுள்ளார். அண்மைக் காலமாக இந்திய அரசு மீது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருவதாக இந்திய மத்திய அரசு விசனம் தெரிவித்து வருகின்றது. முன்னதாக காஷ்மீரில் 3 இந்தியப் போலிசார்கள் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து ஐ.நா பொதுச் சபையில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்