உலகம்
Typography

இந்தோனேசியாவின் பிரசித்தமான சுற்றுலாப் பகுதிகளாக விளங்கும் பாலி மற்றும் லம்போக் தீவுகளை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 7 ரிக்டர் அளவில் மிகவும் வலிமையான நிலநடுக்கம் தாக்கியது.

இதனால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 131 ஆக உயர்ந்துள்ளதாகவும் 200 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வலிமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் தாக்கத்தால் ஆயிரக் கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் இருந்து இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு பொது மக்கள் மீட்கப் பட்டு வருகின்றனர்.

இதேவேளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ கடும் வீரியம் அடைந்துள்ளது. ஏற்கனவே இதனால் 2 90 692 ஏக்கர் காடுகள் எரிந்து போயுள்ள நிலையில் கிட்டத்தட்ட 1/3 பங்கு தீ மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 16 பாரிய தீச்சுவாலைகளை அணைக்க கிட்டத்தட்ட 14 000 தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 75 வீடுகளை இந்தக் காட்டுத் தீ இரையாக்கியுள்ளதுடன் 14 மைல் சராசரி தொலைவில் மேலும் 9000 கட்டடங்கள் இந்தக் காட்டுத் தீயினால் பாதிக்கப் படும் அபாயத்திலுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்