உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய நுழை வாயில் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டதுடன் மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

நாடு கடந்து வாழ்ந்த ஆப்கான் துணை அதிபர் அப்துல் ரஷீட் டொஸ்டும் நாட்டுக்குத் திரும்பி விமான நிலையத்தில் வரவேற்க பலர் காத்திருந்த வேளையில் இந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

இது தவிர சக்தி வாய்ந்த உஷ்பெக் தலைவரும் முன்னால் யுத்தத் தளபதியுமான இவரை வரவேற்று விட்டு விமான நிலையத்தில் இருந்து மூத்த அரச அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், ஆதரவாளர்களும் வெளியேறும் தருணத்தில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாகாத டொஸ்டும் கிளாட் மேற்கத்தேய உடை மற்றும் சன் கிளாஸுடன் ஆயுத கவச வாகனத்தில் ஏறித் தன் இருப்பிடம் சென்றதாக அவரின் பேச்சாளர் பஷீர் அஹ்மட் தயான்ஜ் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு பற்றிய விபரத்தை காபூல் போலிஸ் பேச்சாளர் ஹஷ்மட் ஸ்டானிக்‌ஷாய் உறுதிப் படுத்தியுள்ளார். நடந்து வந்தே தற்கொலைக் குண்டு தாரி தனது குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் ஒரு குழந்தை, பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சிலர் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். மே 2017 முதல் துருக்கியில் நாடு கடந்து வாழ்ந்த டொஸ்டும் ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்ற போதும் இவரது மீள் வருகையை வலியுறுத்தி ஆப்கானில் வன்முறை மிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவரின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப் பட்டன.

ஆப்கானின் பூர்விக உஷ்பெக் சிறுபான்மை இனத்தவர் தமது விடுதலைக்கு முக்கியமான ஜெனெரல் டொஸ்டும் தம்மை நிறுத்தச் சொல்லும் வரை தாம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்