உலகம்
Typography

இன்று வியாழக்கிழமை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட சர்ச்சைக்குரிய மசோதா ஒன்று இஸ்ரேலை யூதர்களுக்கான தாயகம் என்று பிரகடனப் படுத்துகின்றது.

இந்த மசோதா அந்நாட்டு சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் செயல் என இஸ்ரேல் மக்களும் சர்வதேசமும் விசனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலில் இதுவரை அதிகாரப் பூர்வ அலுவல் மொழியாக விளங்கிய அரபி மொழியின் தகுதியை இது இழக்கச் செய்யும் என்றும் கருதப் படுகின்றது.

ஏற்கனவே ஜெருசலேமில் அமெரிக்கா தனது தூதரகத்தை மாற்றியமைக்க எடுத்த முடிவானது சர்வதேசத்தின் எதிர்ப்பைக் கடுமையாக சம்பாதித்திருந்த நிலையில் இந்த மசோதா முழுமையானதும் ஒற்றுமையானதுமான ஜெருசலேம் தான் இஸ்ரேலின் தலைநகரம் என்றும் கூறுகின்றது. இதனால் இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவை வன்மையாகக் கண்டித்துள்ளார். எனினும் இந்த மசோதாவுக்கு அந்நாட்டின் வலதுசாரி அரசும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவவும் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். இது ஒரு முக்கிய தருணம் என்றும் கூறியள்ளனர்.

முக்கியமாக வரலாற்று ரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி என்றும் அவர்களுக்கென விசேட சுயநிர்ணய உரிமைகள் உள்ளன என்றும் வலதுசாரி அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 8 மணித்தியால விவாதத்துக்குப் பின்பு நிறைவேற்றப் பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

ஆனால் இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் 20% வீதமான அதாவது 9 மில்லியன் அரேபியர்கள் இந்த மசோதாவால் ஜனநாயகம் பழுதாகி விட்டதாக கவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மசோதாவானது இஸ்ரேலியர்களின் சர்வாதிகாரத்தையும் இனவாதத்தையும் பிரதிபலிக்கின்றது என பாலஸ்தீனகளும் அரபு சட்ட வல்லுனர்களும் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்