உலகம்
Typography

உலகளாவிய ரீதியில் குடி நீர் மற்றும் உணவுக்கான தேவையும் பெறுமதியும் அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியாவில் இனி பொது மக்களால் வீணாக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் 1000 ரியால் அபராதம் விதிப்பது என்று புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக உலகில் உணவுப் பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகும். அதாவது சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40% வீதமான உணவு வீணாவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.

இந்நிலையில் சவுதியில் வீணடிக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் 1000 ரியால் அபராதம் விதிப்பது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இச்சட்டம் அமுலானால் இனி சவுதியில் உணவுப் பதப் படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றால் ஒவ்வொரு நாளும் வீணாக்கப் படும் பல கிலோ எடை கொண உணவுகள் விரயமாக்காது தடுக்கப் படும். இந்த சட்டத்தை மீறி நடக்கும் நிறுவனங்களது உரிமையை ரத்து செய்வது என்றும் உணவு மற்றும் வேளான் அமைச்சு முடிவெடுத்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்