உலகம்
Typography

கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழர் மற்றும் பொருளாதார மாநாடு மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.

உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள அங்கோவார்ட் கோயிலுக்கு அருகே இம்முறை உலகத் தமிழர் மாநாடு பண்டைத் தமிழரின் வர்த்தகப் பாதைகளில் முக்கிய இடமான கம்போடியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்கின்றனர். அதிலும் தமிழர்கள் செறிந்து வாழும் தெற்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ் மற்றும் புருனே ஆகியவற்றில் இருந்தும் இந்திய இலங்கைத் தமிழர்களும் இணைந்து பங்கேற்கின்றனர். இந்த மாநாடு முக்கியமாக தமிழர்களின் பெருமை, பழம் பெரும் தமிழ்க் கோயில்கள், பண்டைத் தமிழரின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக் கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப் படுவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாநாட்டில் சுமார் 60 நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் தமிழர்கள் பங்கேற்பது சிறப்பானதாக அமைந்துள்ளது. உலகில் தற்போது 160 நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்வது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டை பின்வரும் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒரிசா பாலு, சென்னை
சீனிவாச ராவ், சியாம் ரீப், கம்போடியா
ஜானசேகரன், சியாம் ரீப், கம்போடியா
திருத்தணிகாசலம், சென்னை
விசாகன், இந்தோனேசியா
ராமசாமி, கம்போடியா தமிழ்ப் பேரவை
செல்வக்குமார், கோலாலம்பூர்
குணவதி மைந்தன், புதுவை

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்